சாயி கிருஷ்ணா
- மதுரகானமிசைத்திடும் நந்தகோபக் கண்ணனே
- உன் வேணுகான இசையினிலே ஆநிரைகள் மயங்குமே
- கோவர்த்தன கிரிதாரியுன்கானாமிர்தக் குழலோசையில்
- ஆவர்த்தன ஆனந்தமாய்க் கோக்கூட்டம் துயிலுமே
- காளிங்க நர்த்தனத்தில் காத்து நின்றாய் காவலனாய்
- ஆயர்தம் குலத்தையே, குவலயத்தையே
- ஆலிலைக் கண்ணனாயகிலத்தைக் காட்டினாய்
- அருந்தவத் தாய் யசோதைக்கே
- வெண்ணை விருப்ப, வெள்ளை மனத்தினிலே, அவல்தனை
- யேற்றாய் நட்புக்கே குசேலனுக்காய்க் குதூகலமாய்
- மதுரா, பிருந்தாவன மாதவனே, மயிற்பீலி தரித்திட்ட
- மாயவனே, வெண்நிற அங்கியில்
- வெள்ளி ஊஞ்சலாடும் பிறவித் தெய்வமே
- சாயிகிருஷ்ணா உன் சாசுவதப் பதமலரடி
- தொழுதிடவே உன் சாந்நித்தியம்
- அளித்திடுவாய் போற்றி, போற்றியே சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்