மயிற்பீலியுடன்
- குழலோசை கேட்டு விட்டால் ஆநிரைகள் மதிமயங்கும்
- குழல்ஊதும் கண்ணனைக் கண்டே
- கோ கூட்டம் மனம் மகிழும், உளம் புகழும்
- சிறுவர் பாலர்களும், பரவசமாயன்பைப் பகிரும்
- மனம் மகிழ்ந்து நிதம் நெகிழ்ந்து, நட்பினிலே வளரும்
- மயிற்பீலி தரித்துவரும் மாயக்கண்ணன் மாதவன்
- குயிலோசை போல அவன் குழலோசையிசைக்கும்
- கேசவ கோவிந்தன்
- ஆயர்பாடி மாளிகைதனில் ஆனந்தம்தான் மலரு மங்கு
- யாதவர் குலம் மாதவம் செய்த யாதவனைப் புகழும்
- பர்த்திதனின் வியாபகமே சாயி கிருஷ்ணன் தான்
- அந்தப்பார்த்த சாரதியின் திருக்கரங்கள்தான் அபயமளிக்கு மாம்
- கோகுலத்தில், சாயி கோபாலன் கூடும் திருவிழா
- கோபி, கோபாலர்களோடி, யாடிப் பாடி, விளையாடும் பெருவிழா
- பர்த்தி சாயி கிருஷ்ணாவுனக்கு ஜெயமங்களம்
- உன்னருட் கருணையே தருமென்றும் சுபமங்களம்
- உன் சரணமே போற்றி போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்