கொற்றம் நீயாகி
- வேற்றாகி, விண்ணாகி, அண்டமதில் அணுவாகி
- அருட்காட்சி ஆகின்றாய்
- நேற்றாகி, யின்றாகி, நாளையும் நீயாகி
- அருள் சாட்சி யாகின்றாய்
- மாற்றாகி, மருந்தாகி, விருந்தாகி, விருட்சமாகி,
- விருத் தமாயொலிக் கின்றாய்,
- மனம் திருத்தியமைக்கின்றாய்
- கொற்றம் நீயாகிக், குடையும் தானாகித்
- தானா யருட் கொடையாகினாய்.
- குற்றம் பொறுத்து, சுற்றம் சேர்த்தே, சுபிட்சமாம்
- சுகிர்தச் சுகந்தமானாய்
- அந்தி சந்தி நீயாகிச், சொந்தபந்தம் சகலமுமாகித்
- தயைசெய்தே, வாழ்வியலான வாழ்க்கையே நீயாகிறாய்
- எந்தத்திக்கும் உன் வடிவம் எண்திக்குமுன் படிவம்
- என்றென்றும் என் தெய்வமாம் நீ அனைத்துச்
- சகல சர்வமதத் தெய்வமுமாகி
- அகிலத்திலனைத்தும், அங்கிங்கெனாதபடி எங்கும் உன்
- பிரகாசமாய்ப், பிரசாந்திப்பிரவாகமாகிறாய்,
- பிறவேகம் தவிர்க்கிறாய்,
- பரப்பிரும்மமெனப் பெயராகிறாய்
- சுற்றம் நட்பு உற்றார் உறவு என நீயே கொற்றமாகிறாய்
- குற்றம் கலைந்து, ‘குடும்பக் குல’ தெய்வமாயருள்கிறாய்
– தமிழரசி பாலசுப்பிரமணியம்