மலர் மன்னன்

  • ஆன்மீகத் தேடலில் ஆனந்தம் வளரும், மலரும்
  • அனந்தன் உன் திருவடியில் அகிலமெல்லாம்
  • மகிழும், மனங்குளிரும், முகிழும்
  • தினம் உந்தன் தரிசனத்திலுன்திவ்யரூபம் தெரியும், தெளியும்
  • திண்ணமாய் வாழ்வியலில் வாழ்வாங்கு
  • வாய்க்கும், நற்பவி நல்கும்
  • எண்ணமெல்லா முன் எண்ணிலடங்கா
  • அற்புதத்தை அதிசயித்து, ஆனந்திக்கும்
  • வண்ணமெல்லாமுன்வடிவமென்று வாழ்த்துப் பாப்பாடும்
  • கண்ணனாய், இராமனாய்ச், சிவமாய், கோவிந்தனாய்,
  • கோபாலனாய்க், கோலங்கள்தான்
  • காணுமதிலுன்னருள்தான் போலும்
  • வண்ணமய, மலர்களால் மகுடம் சூட்டி
  • மலர்மன்னனுனக்கு மகிழ்வாய்த் தானளிக்கும், களிக்கும்
  • ஆழ்கடலினமுதமுத்துக்களுந்தன் அருளுரைகள்
  • ஏழ்பிறப்பினதிசயங்களுனதன்பு மதமொழிகள்
  • வாழும் வரை குமுதமாயுன்சனாதனக்
  • குளத்தில் மலரும், வளரும், துலங்கும்
  • முகிழ்த்தெழுந்து முத்துப்போலுன் சனாதனச்
  • சத்துக்களில் சத்தியத்தை வளர்க்கும், வாழும், வாழ்த்தும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0