நவ நதிகளாய்

  • கற்பகத்தரு வில் பல, பழவகைகள் தந்து பரவசமாக்கினாய்
  • சொற்பதங்களி லுரையாற்றிச்சொக்கவும் வைத்துவிட்டாய்
  • சொக்கே, உன் சிவசக்தி ஸ்வரூப தரிசனத்தில்
  • சொக்காதார்தான் யார் ?
  • உன் மடை திறந்து கொட்டும் அருவிப் பேச்சில், பாடல்களில்,
  • மயங்காதவர்தான் யார் ? மனம் குளிராதார் தானெவர்?
  • வாழ்வியலில், நல்வாழ்வு வாழப் பொன், மணி,
  • முத்து, வைரப், பவள, வைடூரியம், கோமேதகத்தில்,
  • கோர்த்தளித்த நல்மாலைகளும் சரங்களும்
  • தானெத்தனை சுவாமி
  • மனச்சாளரங்களில் அவையழகூட்டி மெருகேற்றி
  • வருமழகுதானென்ன ? அதுதானுந்தன் சரணமே
  • உன்னவதாரகாலத்திலுன்னருள் பெற்றுன்னைத்தேடியுன்
  • கருணை நாடிப் பன்மதப்பக்தராய்க் கூடியுனைத் தொழுது
  • கருணைக்கடலாமுன் சங்கமத் திருவடிகளில் சங்கமிக்க
  • ஓடி வரும் நதிகளாமெங்களுக்கு இப்பிறவி பெற்ற
  • பயன் தானே சுவாமி?
  • உன் பொற்பதப் பங்கய மலர்பப் பாதங்களுக்கு
  • வந்தனம் சுவாமி போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0