நவ நதிகளாய்
- கற்பகத்தரு வில் பல, பழவகைகள் தந்து பரவசமாக்கினாய்
- சொற்பதங்களி லுரையாற்றிச்சொக்கவும் வைத்துவிட்டாய்
- சொக்கே, உன் சிவசக்தி ஸ்வரூப தரிசனத்தில்
- சொக்காதார்தான் யார் ?
- உன் மடை திறந்து கொட்டும் அருவிப் பேச்சில், பாடல்களில்,
- மயங்காதவர்தான் யார் ? மனம் குளிராதார் தானெவர்?
- வாழ்வியலில், நல்வாழ்வு வாழப் பொன், மணி,
- முத்து, வைரப், பவள, வைடூரியம், கோமேதகத்தில்,
- கோர்த்தளித்த நல்மாலைகளும் சரங்களும்
- தானெத்தனை சுவாமி
- மனச்சாளரங்களில் அவையழகூட்டி மெருகேற்றி
- வருமழகுதானென்ன ? அதுதானுந்தன் சரணமே
- உன்னவதாரகாலத்திலுன்னருள் பெற்றுன்னைத்தேடியுன்
- கருணை நாடிப் பன்மதப்பக்தராய்க் கூடியுனைத் தொழுது
- கருணைக்கடலாமுன் சங்கமத் திருவடிகளில் சங்கமிக்க
- ஓடி வரும் நதிகளாமெங்களுக்கு இப்பிறவி பெற்ற
- பயன் தானே சுவாமி?
- உன் பொற்பதப் பங்கய மலர்பப் பாதங்களுக்கு
- வந்தனம் சுவாமி போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்