சாயி கோவிந்தன்

  • புரட்டாசி மாசம் சாயி கோவிந்தவாசன் வாசம்
  • இரட்டைச் சந்தோஷமளிக்கும் சிரத்தையின் சுவாசம்
  • சாயிவேங்கடவனின் பாசம் பவித்திரப் பந்தம், பாந்தம்
  • சாயிமாதவனின் விடிகாலைச் சுப்ரபாதம் பிரசாந்தியில்
  • ஒலித்திடும் சத்யசாயி ஓம்காரம் சுப்ரபாதம்
  • குல்வந்த் ஹாலினில் கேட்டிடும் அதிருத்ரம் வேதம்
  • நகர சங்கீர்த்தனம், நாம செபம், நாம சங்கீர்த்தனம்
  • அபிஷேக ஆராதனைகள், பஜன்பண்கள், குளிர்காலப்
  • பனித்துளியின் குளுமை குளிர்ச்சியென மலர்ச்சியாய்
  • அத்தனையும் அனுபவித்து மகிழும் சுகமும் ஆனந்தமே
  • சாயிதரிசனம், ஸ்பரிசனம்,
  • சம்பாஷணம், நினைத்தால் மனம் ஆனந்திக்குமே
  • சித்ராவதியின் அழகும், நம் சுவாமியின் நிறுவனங்கள்
  • அனைத்துமே அழகான ஆராதனைகளே
  • அவனியில் மார்கழிக் குளிரின் சுகானுபவத்தில்
  • கோவில்களின் மணியோசைகளும், மலர்மாலைகள்
  • அலங்காரமும், அர்ச்சனைப் பூக்களின் சுகந்தமும்,
  • வாசனைகளும், பூசனைகளும்
  • பிரசாதங்களின் வகைகளும், சுவாமியின்
  • ஆசீர்வாதமும் ஆனந்தமே
  • அனந்தனின் திவ்ய நாமங்களும், சகஸ்ர அர்ச்சனைகளும்
  • ஆனந்த எல்லையே, இல்லைதானதற்கு எல்லையே
  • விடியும் ஒவ்வொரு நாளும் வசந்தத்தின் உச்சமே – நம்
  • வாழ்வியலும் உயர்வாய் உய்யுமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0