வியாழனில்

  • வியக்கும் வியாழனாய் வியாபகனாய்
  • விரைந்து அருள் தர வரவேண்டும்
  • மனம் மயக்கும் உன் பஜன்கள் அன்பு அருள் அறவுரைகள்
  • செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கவுன்
  • சங்கல்பம் தரவும் வேண்டும்
  • நித்தம் உனக்கு மலர்மாலைகள் சூட்டி மலர்களால்
  • அர்ச்சித்து வாசனாதி திரவியங்களில்
  • அபிஷேகித்துன் நாமாவளிகளில்
  • துதிபாடி மனம் ஆனந்திக்க வேண்டும்
  • ஆத்மாவரை அமைதி சாந்தி கிட்ட வேண்டும்
  • திருவே உன் சுவாசகம் எல்லாமே அருவுருவாயகிலத்
  • திலாட்சி செய்து மாட்சி பெற வேண்டும்
  • வியாழனில் ஞான வியாழனாய் ஞாலத்தில் அமைதி நிலவ
  • உன் அருட்கருணை தரவே வர வேண்டும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0