வானமும் பூமியும் எல்லை

  • துன்பம் துயரங்கள் தீர்ந்திடவே
  • சாயிநாதன் சன்னிதி கூடுங்கள்
  • துதிப்போர்க்கு வல்வினைபோம் என்று நம்பி
  • நலம் பெற நாடுங்கள்
  • அவம் போகும் அல்லல் தீருமென
  • எண்ணித்தான் துதித்திடுங்கள்
  • அவனின்றி வேறு கதியில்லை யென்று சுபிட்சம்
  • கடாட்சம் கிடைத்திட முத்திவரை கும்பிடுங்கள்
  • அவனியி லுன்னையன்றி
  • வேறு தெய்வமேதென வேண்டுங்கள்
  • வானம் பூமியும்தான் எல்லையுந் தன்
  • அன்புக்கெனக் கூறுங்கள்
  • கடல் மலை காடு கழனியாம் இயற்கையே உந்தன்
  • கொடைகளென்று சொல்லித் துதித்திடுங்கள்
  • கஜேந்திர மோட்சமாயுன் னன்புக்கருணை கிட்டிட
  • வேண்டுமெனக் கூப்பிடுங்கள்
  • எப்போதும் முப்போதும் உன்னைத் தொழுதிட
  • வரம் வேண்டுமெனத் தொழுதிடுங்கள்
  • நனவு, கனவிலும் நீ வந்தெமைக் காத்தருள
  • வேண்டுமென்றழைத்திடுங்கள்
  • சந்ததிகளைக் காத்தருள வேண்டியே
  • சந்ததம் சங்கீதம் பதிகம் பாசுரம் பாடுங்கள்
  • சாயின் நாராயண சேவைகளாற்றியே மகிழுங்கள்
  • பாபா பிரசாதம் விநியோகித்து ஆனந்தியுங்கள்
  • மனம் மெய் மொழியாலியைந்து காயம்
  • ‘மனம்’ பலமுடனியன்ற சாயி
  • சேவைகளாற்றியினிதாய் இன்புறுங்கள்
  • சத்ய சாயி பக்தர்நாமென்று பெருமை பொறுமை
  • இனிமையுடன் ஆனந்தமாய் ஆராதியுங்கள்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை,
  • அகிம்சையில் அனுதினமும் வாழுங்கள்
  • கீதைப்பாதையில் நடந்திடுங்கள்
  • சாய்ராம் நாமம் சொல்லிடக் குழந்தைகளைப் பழக்கிடுங்கள்
  • பஜன் சத்சங்கத்திலிணைந்து சமிதி சேவைகள் செய்திட
  • உதவேகமளியுங்கள், ஊக்கப்படுத்துங்கள்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0