சாஸ்வதப் பாதம்

  • சுந்தரபாதம் சாயி சுந்தரப் பாதம்
  • சந்திரவதன சாஸ்வதப் பாதம்
  • சுகந்த மணம் வீசும் கந்தன் பாதம்
  • சகலர்க்கும் நற்பவி நல்கும் நற்றுணைப் பாதம்
  • சுமங்கலிகளுக்குச் சுபமங்கலம் அளித்திடும் சுபயோகப் பாதம்
  • சகா சுற்றம் நட்பு உறவுக்குப் பாலமாகும் பாலம்
  • சுலபத்தில் தேடி வந்து தரிசனம் தந்திடும் பாதம்
  • சகல உயிர்க்கும் நாடிச்சென்று சாந்நித்யமளிக்கும் பாதம்
  • சுபயோக சுபதினத்தில் பர்த்தியிலவதாரம் செய்திட்ட பாதம்
  • சந்ததிகளைக் காத்திடும் சந்தனநிற, நிறை மணப் பாதம்
  • சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்திடும் பவித்திரப் பாதம்
  • சந்திரன் சூரியனைக் கண்களாய்க் கொண்டுள்ள பாதம்
  • சுழழும் முக்கண்ணணின் கருணைக்கடல்
  • காத்தருளும் பாதம்
  • சத்தியத்தைப் பாடமாக்கிச் சனாதனம் வளர்க்கும் தர்மப் பாதம்
  • சுகிர்த அமிர்தமாய் வர்ஷிக்கும் ஸ்ரீ சத்யசாயி நாதன்
  • வலம்புரிச் சங்குப் பாதம்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமையில் திளைக்க வைக்கும் பாதம்
  • சுகுண மனோகர சுதர்சன தரிசன ஸ்ரீவிஷ்ணு பாதம்
  • சரஸ்வதி சமேத பிரம்மப் பாதம்
  • சுகமளித்திடும் கோபி கோபர்களும் ஆநிரைகளும்
  • கொண்டாடி மகிழும் கோகிலப் பாதம்
  • முப்போதும் எப்போதும் உடன் துணைநிற்கும்
  • பாபாவின் கமல மலர்ப்பாதம்

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0