சாயி முகுந்தன்
- காரிருள் கலைந்து வெண்மேகம் வெளிப்படும் – உன்
- பேரருள் வியாபமாய் பக்தர்களிதயமதில் நிறைந்திடும்
- கார்மேகம் நகர்ந்து பல்திசைப் பரவும் – உன்
- கருணை மழை நீர் அன்பாயருள் மழை பொழியும்
- நீலமேகம் நித்திலமாய் நிர்மலமாயுன்
- நிதர்சனத்தைக் காட்டும் – அதில்
- நீலவண்ணனுன் வேய்ங்குழல் ஓசை ஒலிக்கும்
- நட்சத்திரக் கூட்டங்கள் நாள்தோறும் சந்திக்கும் – அதில்
- நிலவாயுன்னெழில் வதனம் தெரிந்து அழகூட்டும்
- கோகுலத்தில் கோக் கூட்டம் வரிசையாய் நிற்கும் – அவை
- ஸ்ரீ கிருஷ்ணனுன் நர்த்தனத்தைக் கண்டு ரசிக்கும்
- பர்த்தியினில் பன்னாட்டு பக்தருள்ளம் சங்கமிக்கும்
- அதில் நிச்சயமாயுன் னருட்கருணைக் கதைகளும்
- பரிச்சயமாய் அங்கம் வகிக்கும்
- இயற்கையும் இறையும் நீதானே எதிலுமுனை நினைந்து
- பார்த்தலழகேயதுவும் மெய்யே
- கற்பனைகள் கவி கலைகளிலுமுந்தன்பொற்பாத
- தரிசனம்தான் தர வேண்டும் ஸ்ரீ சாயி முகுந்தா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: