சாயி முகுந்தன்

  • காரிருள் கலைந்து வெண்மேகம் வெளிப்படும் – உன்
  • பேரருள் வியாபமாய் பக்தர்களிதயமதில் நிறைந்திடும்
  • கார்மேகம் நகர்ந்து பல்திசைப் பரவும் – உன்
  • கருணை மழை நீர் அன்பாயருள் மழை பொழியும்
  • நீலமேகம் நித்திலமாய் நிர்மலமாயுன்
  • நிதர்சனத்தைக் காட்டும் – அதில்
  • நீலவண்ணனுன் வேய்ங்குழல் ஓசை ஒலிக்கும்
  • நட்சத்திரக் கூட்டங்கள் நாள்தோறும் சந்திக்கும் – அதில்
  • நிலவாயுன்னெழில் வதனம் தெரிந்து அழகூட்டும்
  • கோகுலத்தில் கோக் கூட்டம் வரிசையாய் நிற்கும் – அவை
  • ஸ்ரீ கிருஷ்ணனுன் நர்த்தனத்தைக் கண்டு ரசிக்கும்
  • பர்த்தியினில் பன்னாட்டு பக்தருள்ளம் சங்கமிக்கும்
  • அதில் நிச்சயமாயுன் னருட்கருணைக் கதைகளும்
  • பரிச்சயமாய் அங்கம் வகிக்கும்
  • இயற்கையும் இறையும் நீதானே எதிலுமுனை நினைந்து
  • பார்த்தலழகேயதுவும் மெய்யே
  • கற்பனைகள் கவி கலைகளிலுமுந்தன்பொற்பாத
  • தரிசனம்தான் தர வேண்டும் ஸ்ரீ சாயி முகுந்தா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0