சுகந்தமாய் வருகிறாய்

  • ஸ்ரீ சத்திய சாயிசிவமே நீ தானே எங்களகமே
  • அகமும் புறமும் உன் தவமே
  • சீலமும் சாலமும், உன் மதி முகமே
  • ஸ்ரீசைலபுரத்து ஈசனே, பர்த்தித் தலப்பர சிவனே பரபிரம்ம
  • சாயீசா, எங்குமெதிலும் நீயிருந்துதானே உறைகின்றாய்
  • பக்தர் குறை தீர அருளுரை, அறவுரை, யுரைக்கின்றாய்
  • அமுத மொழிகளுரைத்துச் சனாதன தர்மத்தில்
  • வழிநடத்துகின்றாய்
  • அரனும், அரியுமாயிருந்தன்பு வழியருள்கிறாய்
  • சனாதன தர்மமளித்துச், சாந்நித்திய மளிக்கின்றாய்
  • அலைகளில் நீர்த்துளியாய், மேகங்களில் மழையாய்க்
  • காற்றினில் சுகந்தமாய், வியாபகமாய்ப், பரந்து விரிந்து
  • கருணை செய்கிறாய்
  • வீணையின் நாதத்தில், குழலின் இனிமையில், வேள்வி
  • கேள்வியில், எங்குமெதிலும் நிறைந்து காட்சி தருகிறாய்
  • நினைத்தாலே அபயமளித்து அருள் சுரக்க ஓடிவருகிறாய்
  • எத்தெய்வப் பெயரிலழைத்தாலும் முப்போதும் தப்பாது
  • வந்து சாட்சியாகிறாய்
  • சிவனின்றிச் சீவனில்லையதில்
  • அன்பே சிவமாய் மாட்சியளிக்கிறாய்
  • நாயன்மார்களும், சிவனடியார்களும், பக்தர்களும்,
  • உன் தீட்சையில் மீட்சி பெற வைக்கிறாய்
  • நான்மறையில் வேதமாய்க், கீதமாய், நாதமாய்க்
  • நல்லுலகில் நற்பவி நல்குகிறாய்
  • அனைத்துயிர் உருவிலும் நிறைந்து நின்று கருணை செய்யும்
  • கருணாமூர்த்தி சாயீசா உன் மலரடி சரணம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0