ஸ்ரீ சாயி லலிதாம்பிகையாய்

  • சாயி அம்பிகைக்குச் சந்தன அபிஷேகம் செய்து
  • சந்தோஷம் அடைந்திடலாம்
  • சாஷ்டாங்கமாய் வணங்கியே வாழ்வியலில்
  • வளம் பெற்றிடலாம்
  • தாயி அம்பாளைத் தங்கத்தொட்டில் ஊஞ்சலில் வைத்து
  • லாலி பாடலாம்
  • மாயி மகமாயி, மகா மாயா வாய், மனதில்
  • வைத்து மகிழ்வுறலாம்
  • மஞ்சளும் குங்குமமும், தந்து மங்கையர்க்கு
  • மங்கல வாழ்வு அளித்திடும் தாயவள்
  • பக்தர்மடியை மஞ்சமாக்கித்துஞ்சும் சேயவள்
  • பஜன்பண்கள் பாமாலைகள் நாம ஸ்மரணை
  • நகரசங்கீர்த்தனங்களை, லயித்து ரசிக்கும்
  • ஸ்ரீ லலிதாம்பிகையவள்
  • அனைத்துச் சேவைகளிலும் ஆத்மார்த்தமா யணிவகுக்கும்
  • சாயி அன்பர்களின் அன்பு அன்னையவள்
  • மாதா, பிதா, குரு, தெய்வம், சகாவாய்ச், சகலரையும்
  • காத்து நிற்கும் சாயி காமாட்சியவள்
  • சங்கரி, சாம்பவி, பைரவி, பார்கவி, சண்டிகை, சாவித்திரி,
  • மீனாட்சி, விசாலாட்சியாய், எப்பெயரில்
  • அழைத்தாலும் பிரசன்னமாகிப் பிரிவினை போக்கி
  • நற்பவி நல்கிடும் முத்தேவியுமானவள், முழுமதிதானவள்
  • சாயீஸ்வரி, சர்வேஸ்வரி, பர்த்தீஸ்வரி, பரமேஸ்வரி,
  • ஸ்ரீ சிவசக்தி ரூபிணி சாயிமாதாவிற்கு
  • சாஷ்டாங்க நமஸ்காரம், சர்வாங்க அலங்காரம்
  • ஜேஷ்டாங்க உபச்சாரம் சரணம் போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0