முத்தாய்ப்பாய்

  • மும்மலங்கள் நீக்கிட முத்தாய்ப்பாய் நீ வரவேண்டும்
  • எம்மதமும் சம்மதமாயேற்றிட நல்மனம் நீ தரவேண்டும்
  • கல் மனமும் கரைந்திடவே உன் கருணையின்
  • ஒளியருள வேண்டும்
  • துன்பம் துயரமெல்லாம் உன்னருளால் மேகம்போல்
  • கலைந்திட வேண்டும்
  • இன்பம் துன்பம் எது வரினும் இலகுவாக ஏற்றிடும்
  • மனப்பக்குவம் தர வேண்டும்
  • வன்ம மெதுவுமண்டாமலுன் வரம் வந்து
  • நற்பவியருள வேண்டும்
  • பன்மதப் பக்தஅன்பர்களின் நல்வாழ்வும் உன்னால்
  • நலமே பெற வேண்டும், குலமே தழைக்க வேண்டும்
  • திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை
  • நீ எத்திக்கும் துணையாய்த் தொடர்ந்து வர வேண்டும்
  • முக்கனிச்சாறாய் முப்போதும் உடல் மனநலம்
  • காத்திட வேண்டும்
  • சந்ததிகள் தழைத்திட உன் தருமமிகு தயை தனைக்
  • கருணையாய்த் தரவேண்டும்
  • சொந்த பந்தச் சுற்றம் நட்பு சூழச் சுகமாயுனைத் தொழுதே
  • நலமாய் வாழ்ந்திட வேண்டும் ஸ்ரீ சத்யசாயீசா

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0