இதயத்தில் குடியிருந்து
- பாம்பணையில் பள்ளிகொண்டாய் ஸ்ரீ சத்யசாயி நாராயணா
- பார்த்திபனே காத்தருள்வாய் ஸ்ரீ சத்யசாயி நாராயணா
- பர்த்தித்தல அவதாரனே ஸ்ரீ சத்தியசாயி நாராயணா
- கீர்த்தி தந்துன்னடி சேர்த்துக் கொள்வாயே
- ஸ்ரீ சத்ய சாயி நாராயணா
- இதயத்தில் குடியிருந்து இனிய வாழ்வியல் அளித்திடுவாய்
- ஸ்ரீ சத்ய சாயிநாதா
- உதயத்தில் மலர்ந்திங்கு உலகையே இரட்சிக்கின்றாய்
- ஸ்ரீ சத்ய சாயிநாதா
- பதியம்தான் சாயின் பக்தி நாற்று, இப்பாரெல்லாம்
- செழித்து நிற்கும் ஸ்ரீ சத்திய சாயிநாதா
- பர்த்தீசனும் பரப்பிரம்மமாயும் பவனிதான் வருகிறாய்
- ஸ்ரீ சத்ய சாயிநாதா
- அன்புக் கரத்தை நீட்டியுன் பக்தர்களை அரவணைப்பாய்
- ஸ்ரீ சத்ய சாயிநாதா
- துன்பக் காற்றினை தூரத்தே விலக்கி வைப்பாய்
- ஸ்ரீ சத்ய சாயிநாதா
- பக்தர்க் கருள்தந்து கருணை மழை பொழிவிப்பாய்
- ஸ்ரீ சத்ய சாயிநாதா
- முக்தியளித்து முன்னின்று காத்து முகவரியாகி விட்டாய்
- ஸ்ரீ சத்ய சாயிநாதா. உன் மலரடி சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்