மலையெனத் துயர் வரினும்
- மழையெனத் துயர் வரினும் வெள்ளமாய் வடிந்துவிடும்
- மலை என இடர்வரினும் பனியா யுருகிவிடும்
- விலையேதுன் அன்புப் பிரேமைக் கருணைக்கு
- கலைநயமாம் கற்பக விருட்சக் காவியம் தானுன் னருளும்
- அவதாரங்கள் பலவாகி பவதாரமாகி நின்றாய்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சைதான்
- பக்த அவஸ்தார மென்றாய்
- ஹரிஹரனுமாய் வந்த கிலத்தைக் காத்துரட்சிக்கின்றாய்
- ஆபத்பாந்தவானாய்
- நிலவிலுமுன் முகம் முகமன் கூறிச் சிரித்துத்தான் வரவேற்கும்
- ஆதவனே, ஆதரவாய், அருள்செய்வாய்
- வானவில்லில் கூடவர்ணஜாலமாய் ஜொலித்திடுவாய்
- வானுயரப் பார்த்தாலும் வகைவகையாய்க்
- காட்சியில் தெரிவாய்
- மத்தாப்பின் பூக்களிலும் முத்தாய்ப்பாயுன் கரிசனம் தெரியும்
- முத்துப் போலுன் அன்பு அறவுரைகள் அகிலத்தைய யென்றும்
- ஆட்சி செய்து வழி நடத்தும்
- சத்துப் போலுன் கருணை அகம்தனில் புகுந்து
- சாட்சியாயுன் கீதை வழி நடக்கும்
- சத்சித் ஆனந்தத்தில் சகலரும் உன் சாந்நித்தியத்தில்
- ஒருங்கிணைந்து ஒருமிக்கும், ஒற்றுமையாகும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்