இல்லை வரையறை
- ஈசன் உன்னை நாடி வந்தது ஈரேழு ஜென்மப் புண்ணியம்
- தானென்பது மாறாது
- வாசனும் நீ, வாத்ஸல்யனும் நீ, வடிவங்கள் பலவாக
- அவதரித்த காரணம் புரியாது
- நேசன் உன் நேத்திர நயன தீட்சையில் நற்பவிகிட்டுதலை
- முன்னர்தான் உணர முடியாது
- பாசம், பந்தம், கட்டுண்டு மாயையில் வீழ்ந்துள்ள
- உயிர்களுக்கு என்றும் உன்னை யறியவே இயலாது
- சந்தித்த பக்தர்களின் சிந்தித்த அனுபவங்கள்
- கூறக் கூறவே கேட்டு மாளாது
- உன் ஸ்பரிசனசம் சம்பாஷண மகிமைகள்
- எண், எழுத்திலடங்காது
- கண்ணிமைகளாய்க்காத்தருளும் பிரசாந்திக் கருவறையிலுன்
- காட்சி காண ஆசை தீராது
- நான் வேறு நீ வேறன்று, நான்தான் நீ, நீதான் நான்
- ‘நானிருக்கப் பயமே’னெனும் உன் கூற்று பொய்க்காது
- உன் அபயஹஸ்தமிருக்க உன்னடியவர்க்கு ஏது குறை ?
- உன் அனுக்கிரகம் கிடைக்க மானிடசேவை தானே நிறை ?
- உன் அன்புமதப்பிரேமை அருட் கருணைக்கெல்லை
- இல்லையே வரையறை?
- உன் தாள் பணிந்து வணங்குகிறோம்
- நான்மறையாம் நீ தானே எங்கள் இறை சாயீசா ?
– தமிழரசி பாலசுப்பிரமணியம்