ஆடி வெள்ளம்
- ஆடி வரும் ஆடிவெள்ளம் இரு கண்களுக்கும் அழகு
- உன்னருட் பிரகாச உள்ளமோ எங்களின் அகத்திற்கு அழகு
- ஓடி வரும் சித்திராவதியும் நதிகளில் அழகு – உன்னை
- நாடி வரும் பக்தர்களுக்குன் அன்புக்கருணையே அழகு
- பாடி வரும் பாடல்களில் உன் பஜன் பாடல்கள் அழகு
- தேடி வரும் தெய்வத் திருவடிவங்களில் உன்
- திவ்ய தரிசனம் அழகு
- கூடி வரும் பக்த அன்பர்க்கட்கு உன் நகர சங்கீர்த்தனத்தின்
- மெதுவான நடத்தல், நகர்தல் அழகு
- பிரசாந்திக் கருவறையின் கண்கண்ட தெய்வம் உன்னைத்
- தேடி வரும் சாயி குடும்ப உறவுகள்
- வருகை, வரிசைகள் அழகு
- தாயே உன் தாயுமானவ பந்தத்தின் பாந்தம் அழகு
- உலக சாயி குடும்பத்தின் சொத்து நீயே எனும்
- எண்ணமே திண்ணமாம் அழகு
- தாயி உன் அங்கிகளின் வர்ண வண்ணங்கள் அழகோ அழகு
- சாயிமா உன் கோடானுகோடி ‘சாய்ராம்’ களின்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை,
- எண்ணங்கள் அழகுக்கழகு
- என்றும் நீ காத்தருள்வாயெனத் திண்ணமாய்
- ஒவ்வொரு சாயி பக்தரி தயத்து மிருப்பது
- சத்யமான உண்மை, அது நன்மையே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்