அழைத்த போதெல்லாம்

  • சுவாமி உன்னை அழைத்தபோதெல்லாம்
  • அலுக்காமல் வருகிறாய்
  • நினைத்த நிகழ்வினி லெல்லாம் நிஜமாய்த்தான் தெரிகிறாய்
  • உன் பக்தனி னானந்தக் கண்ணீர்தானுனக்குப்
  • பிடித்த பிரசாதம்
  • தெய்வத்தின் தெய்வமாய் நீ தானெங்கள் சந்ததிகளின்
  • வரப் பிரசாதம்
  • கேட்காமல் கேட்டதெல்லாம் வந்து அள்ளித்தா னளிக்கிறாய்
  • அல்லன வற்றினையும் விலக்கித்தானே விலக வைக்கிறாய்
  • தொட்டதனைத்தும் துலங்கச் செய்கிறாய்
  • உன் விபூதிப் பிரசாதத்தால் பட்டதெல்லாமும்
  • துளிர்க்கச் செய்கிறாய்
  • சாயி அனுபூதியாமுன் விபூதி மகிமையும் வேறல்ல
  • என்று உணர வைக்கிறாய்
  • சுலபப் பிரசன்னத்தில் வந்து அனைவரையுமாட் கொள்கிறாய்
  • என் விபூதியே எனது அடையாள அட்டை
  • என்றழகாய் மொழிகிறாய்
  • உன் கருணைக் கடலுக்கில்லையே ஏதும் கரை
  • உன் அருளன்புக்கு அவ்வானம்தான் எல்லை
  • உனதன்பு மதத்திலிருப்போர்க்கு வருமோ தொல்லை
  • நீ குடியிருக்கும் இதயக்கோவில்களுக்குக் கதவே இல்லை
  • என் சுவாமி நீ மட்டும்தான் எனும் ஐயத்திற்கு இடமே இல்லை
  • இவ்வையத்தில் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை,
  • அகிம்சை, நிலவிட அருளவேண்டும் ஸ்ரீ சத்திய சாயீசா
  • குவலயத்தில் மாதா, பிதா, குரு,
  • தெய்வச் சகாவாய் சாஸ்வதமாகினாய்
  • அகிலத்தில் பஞ்ச பூதங்களிலும் கோலோச்சுகிறாய்
  • மேதினியில் உன்னையன்றி
  • உன் சரணமின்றி வேறு கதியில்லை சுவாமி

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0