கன்றே போல்
- ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உணர வைத்தாய்
- அது நன்றே அதில் நின்றே நீயும் தானருள் வித்தாய்
- கன்றே போல் ஓடி வந்தால் தாய்ப்பசுவாம் நீ வாயமுது
- பொழிந் தழகழகாய் அன்பு தருவாய்
- தென்றலாய்ச் சுகம் அளித்து இதயச் சிம்மாசனத்தில்
- வீற்றிருப்பாய்
- அன்பு மதமொன்றேவென அன்புக் குடைபிடித்தாய்
- என்புருகும்படியுன்னருட்கருணைதனில்
- எண்ணியதைச் செய்வித்தாய்
- பண்பும் கலாச்சாரமும் இரு கண்களென உணர்வினில்
- பயிற்றுவித்தாய்
- பரப்பிரும்மம் நீயென்றேயிப் பார்முழுது முணரவைத்தாய்
- நவராத்திரி நன்நாளில் இதயமதில் கொலுவிருக்க வந்திடுவாய்
- நிலவிலும் நீயே சாட்சியாயிருந்து சாந்நித்தியம் தந்திடுவாய்
- பகலிலுமிரவிலும் நினைவிலும் நிஜத்திலும் நீயிருந்தே
- வாழ்வியலில் வரங்கள் பல அளித்திடுவாய்
- சந்ததிகள் காத்து நின்று சத்சங்கங்கள் பல உருவாக்கி
- சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையில்,
- தன்னலமற்ற சேவையாற்றிட உன் கருணையன்பில்
- கடாட்ச மளித்திடுவாய் ஸ்ரீ சத்ய சாயீஸ்வரித் தாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்