சாயி மகாலட்சுமியாய்

  • சாரதா நவராத்திரியில் சாந்நித்திய மளித்திட வந்திடுவாய்
  • மனம்நொந்து துயரடைந் தோர்க்குப் புதுப்பாதை காட்டிடுவாய்
  • சுகந்த பரிமள மணம் வீசுமுன் விபூதிப்
  • பிரசாதம் தந்தருள்வாய்
  • தகுந்த பக்தரைத்தான் தத்தாய்த் தக்கவே உனது
  • அன்புக்கருணைக்குத் தேர்வும் செய்துள்ளாய்
  • வித்தாகி விளைவாகிச் சகலமும் நீயாகிச்
  • சங்கடங்கள் களைந்திடுவாய்
  • முத்தாகி மணியாகி முழுவதுமே நீயாகி உன்
  • சங்கமத்தி லிணைத்திடுவாய்
  • வேற்றாகி நேற்றாகி விண்ணாகி வேற்றுமமை களைந்திட்டே
  • உலகினைஅன்புமயம் அன்பு மதமாக்கிடுவாய்
  • நான் வேறு நீ வேறல்ல வென்று நல்வாக்குரைத்திட்டு
  • நற்கதியுமளித்திட்டாய்
  • சாயி மகாலட்சுமித் தாயாராய் இன்று வந்து
  • சௌபாக்ய மளித்திடுவாய்
  • சாயிமகாலட்சுமித்தாயாய்க் காட்சியில் தெரிந்தெங்கள்
  • வளரும் சந்ததிகள் காத்து நிற்பாய்
  • சாயி மகாலட்சுமி அம்மையாய் நின்று வாழ்வியலில்
  • நல்வரம் தந்திடுவாய்
  • ஸ்ரீசத்யதசாயிமகாலட்சுமி அன்னையுன்
  • கருணை அன்பினைத் தந்து
  • இப்பிறப்பிலுன் நற்சேவைகளாற்றிட
  • உடல் மன பலம் தந்தருள்வாயே
  • சாயிமா சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0