தமிழ்ப் புத்தாண்டு

  • சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வருகவே சாயி
  • உன்னருளால் முத்திரை பதித்து முகவரியாய் வருக சாயி
  • உன் கருணையால் பத்தரை மாற்றுப் பசும்பொன் னாமுன்
  • அருட்கருணை தயையிலே
  • நித்திரையிலும் நீ வந்து நலம் மட்டுமே நல்குவாய் சாயி
  • உன் பிரேமையிலே
  • திரைகடல் ஓடித் திரவியம் சேர்ப்ப வரிதயத்தாமரையிலுன்
  • னரவிந்தமலர்ப் பதந்தொழுவர்
  • அகத்திருள்விலக்க அருளொளிநல்கிட உனைத் துதிப்பர்
  • அகங்களிலே அகமகிழ்ந்துனைப் பூசிப்பர்
  • இறையே உன் நாமஸ்மரணையில் நலம் வாழ
  • உன்னருளையே வேண்டுவர்
  • இறங்கி வந்து இரங்கி நீ தான் கருணைக்
  • கொடைய ளிப்பாயதில் மகிழ்வருன் பக்தரே
  • சாயிகீதமுன் சங்கல்ப கானம் சங்கீத சாம்ராஜ்ய
  • சம்ரக்ஷசண நாதம்
  • சாயி வேதம் சகலர்க்கும் சகல பாவம் நீக்குமுன் புனிதப்பாதம்
  • சாயின் அன்பு மதமது போக்கும் மனிதனின் மதம்
  • சாயி ராமம் ஒன்றே சாஸ்வதமாய்நின்று நிலைக்கும்
  • சாகித்திய மந்திரம்
  • எத்துணை இடர்துயர்வரினும் விரைந்து வந்து காத்திட
  • நீ வர வேண்டும்
  • அத்துணை துன்பத் துயர்வரினும் நீ துணை நின்று
  • கருணை புரிந்தருள வேண்டும்
  • இத்தனைதானின் னலெனினும் அனைத்திலும்
  • தாங்குமிதயச் சக்தியைத் தர வேண்டும்
  • இப்புவியின் வியாபகமே நீதானென் றனைத்
  • துயிர்களுமுணர வேண்டும்
  • பயிர்கள் செழித்துப்பாங் காயுலகு சிறக்க வேண்டும்
  • உயிர்கள் செலுத்துமன்பில் மனிதம் மலர வேண்டும்
  • பாரதம் உலக குருவாய் சனாதன தர்மத்தில் மிளிர வேண்டும்
  • எங்குமெதிலும் தமிழ்போலுன் னருட்கருணை விரிந்து
  • பரந்துவான் பூமிவரை பெருகிட வேண்டும்
  • நீ தங்குமிடமெலாம் பக்தரிதயப் பிரேமையில்
  • திளைத்திட வேண்டும்
  • நீ தானே தாங்குவாயென ஆனந்தக் கண்ணீரில்
  • நனையவேண்டும்
  • உன் சரண சரணாகதியே சரணம் சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0