சிவராத்திரியில்

  • மகாசிவராத்திரிப் பிரியனே லிங்கோத்பவனே
  • பவசாகரத்தி னமுதனே சாயிலிங்கேஸ்வரனே
  • அவதாரமாய் வந்த ஸ்ரீசத்ய சாயி சிவமே
  • லீலா வினோதனே அபிஷேகப் பிரியனே அம்பல வாணனே
  • அத்தனே – உன் ஐந்தெழுத்தைச்
  • சொல்லத் தீவினைகளகலுமே துயர்யாவும் தீருமே
  • பஞ்சாட்சர மந்திரத்தால் மும்மலங்களின் பிழைகளும்
  • மாறுமே எதிர்வினைகளகலுமே ஏற்றம்தான் கிட்டுமே
  • வேதாகமங்களின் வேள்வியனே உருத்திரப் பசுபதியே
  • நந்திவாகனனுன் நர்த்தனங்கள் காணக்
  • கண்கோடிதான் வேண்டுமே
  • தும்பிக்கையோன் தந்தையே துணைவருவாயெந் தையே
  • நம்பிக்கையாயுனைத் தொழுதாலுன் நமச்சிவாய
  • மந்திரம்தான் காக்குமே இந்நானிலத்தை
  • ஸ்ரீ சத்திய சாயி சிவமே சிவராத்திரி நன்னாளில் சிவசக்தி
  • ஸ்வரூபனாய் வந்துன் அபயஹஸ்தத்தில்
  • நல்லாசி அருளவேண்டும் ஸ்ரீ பர்தீஸ்வரா
  • சாயீஸ்வரா பரமேஸ்வரா. சரணம் சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0