தியானத் தபோவனம்
- அன்பு அமைதி ஆனந்தம் கிட்டும் இடம், தலம், தவம்
- தரு, தெய்வீகம்
- இலக்கியச் சரித்திரம் சொல்லும் வட விருட்சம் என்று நீ
- விளக்கிய மகத்துவம் கூறும் உன் தல விருட்ச நாள் இன்று
- கிளைகள் வேரூன்றி விருட்சம் வளரும் உன் பக்தர்கள்
- கூறும் ‘சாய்ராமில்’ உன்னருட்கடாட்சம் மலரும்
- பிரளயத்தில் ஆலிலையில் விஷ்ணுவாய் அதனில்
- சிவமாயும் நீ சுவாமி
- பால சாயி பிராயத்தில் மகிமை, லீலைகளை,
- அற்புதமாக்கியதும் நீ சுவாமி
- எண்ணிலடங்கா லீலைகள் உன் வண்ணமது திண்ணம்
- பிரயாகையின் அட்சய வடம் திரிவேணி வட விருட்சத்தின்
- காட்சியும், சாட்சியுமாயும், நீ சுவாமி
- பிரசாந்தித் தபோவனத்தில், தல விருட்சம் யந்திரப் பிரதிஷ்டை
- செய்த நாளுமிது சுவாமி
- ரிஷிகேஷில் பிரம்ம, விஷ்ணு, சிவத்தலத் தருவாயும்
- நீதானே சுவாமி
- அறிவிற்கடங்கா ஆச்சரியமுன் ஆகர்சனம்
- அறிவியலுமறி யாதுன் ஆத்ம நிதர்சனம்
- அறத்துடனான அன்பொன்றே உன் னழகு தரிசனம்
- மறவாது சாயி தெய்வமே உன் ஸ்பரிசனம்
- பகவானின் நயனம் ஸ்பரிசம் சம்பாஷணம், பொக்கிஷமே
- முனிவர்களும் தபஸ்விகளும் தானே இங்கு வருவரென
- உரைத்திட்டாய் சுவாமி
- ‘பெத்தபொட்டம்மா’வின் தவ இடமும் இதுதானே
- இஷ்டமாய், சுவாமி
- தேவர்கள், ரிஷிகள் வருகை, வரிசையைக் கண்டுன்னைப்
- புரிந்தது மிங்குதானே சுவாமி
- சாயி பக்தர்களுக்கும் தவத்தலமாய்த் தயை செய்து
- வருவதுமித் தபோவனம் தானே !
- ஆல விருட்சம் தழைத்தது போலுன் பக்தர்களுன்
- சாந்நித்யத்தில் இங்கு திளைக்கிறோம்
- ஆலமுண்ட உன் சிவ ரூபமிங்கு காண்கிறோம்
- ஆடலரசன் தில்லை நாயகனாய் உன்னைத் தரிசிக்கிறோம்
- ஆத்ம தரிசனத்திலுன் அன்புக் கருணை மழையில்
- நனைகிறோம்
- மங்கல வாத்தியம் முழங்க மந்திர ஒலி பரவ நீ பிரதிஷ்டை
- செய்வித்த மகத்துவ நாளின்று
- திங்கள் சூடிய சிவமே உன்திருக் கரத்தாலி0த்
- தபோவனம் உதயம் இன்று
- புத்தருக்கு கயை ஆலமரத்தில் கிட்டியது ஆத்ம ஞானம்
- உன் பக்தருக்குன் தயை, இத்தரு, நிழலிலுன் ஆத்ம வேதம்
- ‘பெத்தபொட்டம்மா’வின் ஆத்மார்த்த தவத்தலம் மரமிதுவரம்
- உன் அவதார மகிமையில் உன்னதம் இதுவும்
- தன் மனம் அடங்கிடத் தன்மையளிக்கும் தவக்குடிலே இதுவும்
- என் சங்கல்பம், உற்சாகம், ஆனந்தம் சனாதன சாரதி
- என்பாய் உன் சாத்வீகம், சாந்நித்யம், சாஸ்வதம்
- கூறும் சதாதினச் சாரதிதான் இதுவும் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்