தீப ஒளித்திருநாள்
- தீபாவளித் திருநாளில் தீப ஒளியாய் நீ வர வேண்டும் – உன்
- நாமாவளிகளும் பஜன்களும் நாமணக்கப் பாட வேண்டும்
- கவி புனைந்து பாக்களினால் களிப்பெய்திட வேண்டும்
- சிலை, சித்திரமா யுனை வடித்து மகிழ வேண்டும்
- உனதவதார அற்புதங்கள், மகிமைகள், புத்தகங்களால்
- புகழப்பட்டுப் புரிந்து கொள்ளவேண்டும்
- சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, கருணை, தயையை,
- சனாதனத்தை, மனிதம் மனதில் ஏற்றி மகிழ்வுற வேண்டும்
- நில மகளின் எண் திக்குகளிலுமுன தெண்ண்ணங்களும்
- வண்ணங் களும் வடிவமைக்கப்படுகின்றன
- சிறு துளி நீர்த் துளிகளாயுன் அன்புமதக்கடலில் சங்கமிக்கிறது
- வளி, வெளியில், நாமஸ்மரணை, பஜன்களாய்க் காற்றிலும்
- சுவாசமாயும், ஒலிக்கின்றன
- அக்னிவெம்மையாய் வேள்வியிலே மிளிர்கின்றன
- வானமண்டலத்தின் நட்சத்திரங்களாயுனது பக்தர்கள்
- வையமெல்லாமுன் சனாதன தர்மத்தில்தான்மிளிர்கின்றனர்
- பஞ்சபூதங்களுமுன் னிலடக்கமென்றுணர வைத்திட்டாய்
- இராமாவதாரத்தில் வால்மீகி மூலமும், கிருஷ்ணாவதாரத்தில்
- வியாசமுனி, வாயிலாகவும், தர்ம வழியும், கீதைப்பாதையும்
- காட்டி விட்டாய்
- கலியுகத்தில் ஸ்ரீ சத்திய சாயிபாபாவாய் அவதாரமாகி
- அன்பு மதத்தைத்தான் அதிசயமாக்கினாய்.
- தீபமாய்த் திருவாய்க் கருவாய், கலையாய்,
- பஞ்ச பூதங்களிலுமாய், நாடு நலம் பெற,
- வீடு சுகம் பெறப், பயிர்கள் பெருவளரப் பசிப்பிணியகல,
- வையத்திலனைத்துயிர்களு முறவுகளும் உவகையுற,
- உலகின் ஆன்மீக குருவாய்நம் இந்தியாவை ஏற்று
- வழிநடத்திட, நடந்திட,
- அல்லன நீக்கி, நல்லன தந்தும், தரிசனம், ஸ்பரிசனம்,
- சம்பாஷனத்தாலென்றுமே துணை நின்றும்
- காத்தருளவேண்டும்
- தீப ஒளியாய், வளியாய், வெளியாய், வாழ்வில்
- வளந்தந்தருளர வேண்டும் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்