நித்ய வரம் வேண்டும்
- தினம் உனைப் பாடும் வரம் வேண்டும்
- நான் தேடும் பரம் நீ உடன்வரவேண்டும்
- மனம் உன்னைத் துதித்து மகிழ வேண்டும்
- இதயம் உன் கீதைப் பாதை வழி தொழ வேண்டும்
- நீங்காமல் உன் நாமம் நெஞ்சமதி லொலிக்க வேண்டும்
- அது நிலையாக நின்றங்கு நிலைத்து நீடிக்க வேண்டும்
- மங்காத உன் கருணைதான் கிடைக்க வேண்டும்
- அது வற்றா ஜீவநதியாய்ப் பெருகி பக்தர் மனதில்
- அன்பென்று அடைக்கலமாய்ச் சேரவேண்டும்
- அலைபாயும் வாழ்வியலில் உன் அருளென்னும்
- நங்கூரம்தான் வேண்டும்
- நிலைமாறிப் பழவினை, இரு வினையாய் வந்தாலும்
- மலைபோல் துன்பம் துயர், ஊழ்வினையால்
- வரினும், அவை பனிபோல் நீங்கி உன்
- பதமதில் பணியவே உன் சங்கல்ப
- சாந்நித்யம் சாஸ்வதமாய்வேண்டும்
- ஆதி அந்தமும் நீயே மாதா பிதா குரு
- தெய்வம் சகாவும் நீயே,
- நான் இருக்கப்பயமே னெனும் உன் மந்திரச்சொல்லே
- மங்காது எங்களைக் காத்திடும் தான்
- ஸ்ரீ சத்ய சாயீசா பர்த்தீசா, வருவாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்