விடியல் தந்து
- விடிகாலை ஓம்காரம், ஓசையுடன் வளி மண்டலத்தில்
- பஞ்சபூதங்ககளில் கலக்கிறது
- விடியல் தந்து உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது
- பொன்மணி மாடத்து விளக்கொளியில் சுப்ரபாத மொலிக்கிறது
- நவநிதியாய் மனதிலமைதியைப் பெறுகிறது
- மெய்யன்பர்களின் மென்னடைதனில்
- நகரசங்கீர்த்தனம் நகர்கிறது
- மெய்யே உன் சத்தியப்பாதையே சனாதன
- தர்மத்தை வழி நடத்துகிறது
- அபிஷேக ஆராதனைகளாய் நடக்கிறது
- உன்னை நினைந்தே உள்ளம் நாமஸ்மரணையில்
- திளைக்கிறது, சிலிர்க்கிறது
- ஒவ்வொருநாளுமுன் பஜன்பாடல்கள் புதிதாய்
- ராகமிசைக்கிறது
- திகட்டாத தெள்ளமுதாய்த் தேன்பாகாய்த் தித்திக்கிறது
- சேவைகள் பல, நாராயண சேவைகள் பற்பலவில்
- சாயி நாராயணனுன் நாம ஸ்மரணைலயிக்கிறது
- உயிரினங்களுன் கருணையில் உயிர்த்தெழுகின்றது
- கல்வி, மருத்துவம், ஆன்மீகம், பக்தி, குடிநீர் என
- எச்சேவையிலுமுன் கீதைவழிதான் மிளிர்கிறது
- பிரசாந்தித் தபோவனத் தருவிலுனது செபம்
- தவம் துளிர்விட்டுத் தழைக்கிறது
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை யாயுன்
- பஞ்சநதிப்பிரவாகம் சித்திராவதியின் எழிலாய்ச்
- சைதன்ய ஜோதியாயென்றும் மேதினியில் ஒளிரும்
- பிறசாந்தி வேண்டாமுன் பிரசாந்திபோதுமதுவே
- பிரகாந்தியாகுமே
- அனைத்துமே உன்னால் நடந்துவிடும் சுவாமி
- நீ இருக்க ஏது குறை சுவாமி சரணம் போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்