நீயிருக்கையில்
- விதி, நாள், கோள், என் செய்யும்
- நாராயணன் நீயிருக்கையிலே
- மதிதான் சொல்லுமுன் பதமலரடி தொழுதிட
- வேதபாராயணன் உனைச்சரணாகதி
- பணிந்திடச் சொல்லியே
- சதி, பழி, அல்லவைதானென் செய்யுமுன்
- சாசுவத அருட்கருணை யிருக்கையிலே
- சதிபதியாய் வாழவைக்க உன்
- அருட்கொடை இருக்கையிலே
- அவனியிலே ஏது குறை அரியே
- பன்மதப் பக்தர்களுமுன் பர்த்தியில்
- சங்கமிக்கின்றனர்
- சன்மதனுன் சனாதன தர்மத்தில்
- சாஸ்வதமாய் நிலைக்கின்றனர்.
- அவரவரிதயத்திலுனைத் தெய்வமா
- யெண்ணித் துதிக்கின்றனர்
- அரி அரனும் முதல்வனின் இளையோனு
- முத்தேவியராயுமுனைப் பணிகின்றனர்
- தேவர் திங்களில் தேவர்களுமுனைத் துதிக்க வரிசையில்
- வருகிற காட்சி பெத்தபொட்டு அம்மையின்
- கண்களுக்கும் காட்சியாய்த் தெரிந்ததே
- மும்மலங்கள் நீங்கிடத் திருவெம்பாவை,
- திருப்பாவை, சுப்ரபாதம் பஜன், நகர சங்கீர்த்தனம்
- ஜபதப நாமஸ்மரணை, கவிப்பண்பாக்கள்,
- வேள்விகள் யாகங்கள் யக்ஞங்களிலுனை
- ஸ்ரீ சத்யசாயி ராமனாய், கிருஷ்ணனாய்
- பரப்ரம்மம் ஒன்றே நீயதுவாய்
- சகல தெய்வங்களுமாய்க் காட்சியளித்
- தருள்புரிய வரவேண்டும்
- ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே உன் மலரடி போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்