நீயில்லாத இடம்

  • நீ இல்லாத இடமென்று வேறேதுமில்லை நீ யல்லாத
  • உயிரேதும் வேறாவதில்லை
  • உன்கருணையன்றி வேறேதும் நிலையானதில்லை
  • இதயச்சிம்மாசனத்தில் நீ தானமர்ந்துள்ளாய்
  • உதயத்தில் ஓம் காரமாய் நீயே ஒலிக்கின்றாய்
  • சுப்ரபாதமும் சுந்தரகாண்டமும் சுகமானதன்றோ ?
  • பக்தர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் நீ கஜேந்திர
  • மோட்சச் சுகப் பரப்பிரும்மமன்றோ ?
  • எனைப்பாராமுகமுனக்கு நன்றோ? வென்றெண்ணுபவர்க்கும்
  • நீ, நான் பாராமுகமென் றொன்றுண்டா வெனப்
  • பார்த்துப் பார்த்துக் கருணை செய்வாய் நன்றே !
  • விதி நேராவண்ணம், மதிமாறாவண்ணம், திண்ணமாய்
  • வினையகற்றி நல்லன மட்டும்தான் நல்குவாய்
  • நற்பேறளித்தே வரமருள்வாய்
  • அருவுருவாய் வந்து நல்லாசியளிப்பாயுன் திருப்பத
  • மலரடி தொழவே இடமளிப்பாய்
  • என்பும் உருகும் உன் கருணையில் திளைத்திட வரமளிப்பாய்
  • அன்பே உருவான சத்தியத் தெய்வமுன் சரணத்தில்
  • சங்கமமளிப்பாய்
  • ஒன்றே தெய்வமாய் பரப்பிரும்மமாய்ப்
  • பாரில் வலம் வந்து, குலம் காப்பாய்
  • ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே
  • உனக்கு ஆனந்த வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0