ஆராதனை நாளில்
- ஒவ்வொரு மூச்சிலும் உன் ஆராதனைதான் தொடர்கிறது
- சுவாசமே, வாசமே, சுவாசகமாய் நடக்கிறது
- சத்தியத்தை விட உன்னதம் வேறேதும் இல்லை
- ஸ்ரீ சத்திய சாயி நாதா உனைத் தவிர, சாஸ்வதம்
- உலகில் வேறுறவுகள் யாதுமில்லை, யாருமில்லை
- மாயையை விலக்கி, மனதை விளக்கித் தெளிவேற்றி
- அறிவை மெருகேற்றிப் பக்தியில் பெருக்கேற்றி, உலகியலில்
- இன்பதுன்பம் சமமாய்க்கொள்ள உருவேற்றி
- வாழ்வியலில், வாழ்வாங்குவாழ வைப்பாய்
- ஆராதனை நாளில் உயிர்களுக்குக் காட்சி தந்து மாட்சி செய்து
- மீட்சியளித்திட வுன்கருணைத் துணைவேண்டும்
- இரு வினைகளால் வரும் அல்லன நீக்கி நல்லன நல்கியே
- தனிமனித மனமும், வீடு, நாடு, உலகும்
- பல்லுயிர்களும் நற்சாந்தி பெறப்
- பிரசாந்திக் கருவறைத் தெய்வமே
- நித்தியச் சத்தியச் சாந்தியருளவர வேண்டும்
- சுவாமி சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்