ஞாலமும் நீயானாய்
- ஆதி அந்தமும், அணுவுக்குள் அணுவும், கரும்புக்குள்
- சுவையும், கனியில் ரசமும், விண்ணும் மண்ணும்,
- விகசிக்கும் ஒளியும், வியாபகமும் ஞாபகமும்,
- ஞாலமும், நீயானாய்
- விதையுறைப் பிரகிருதியுள் தெய்வீகமெனும் விதையாய்
- உயிர், இயற்கை, ஆன்மா வனைத்தும் நீயாகி
- ஒரே பரப்பிரம்ம மாயருள்கின்றாய்
- கலியுக ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே நலமருளி
- நல்வாழ்வு தந்தே இந்நானிலத்தைக் காத்து
- நற்பவியளிப்பாயே, நற்கதி தருவாயே.
- மாதா, பிதா, குரு, தெய்வச் சகாவே, நின் பங்கயப்பதமலர்
- தொழுகின்றோம், உன் பதம் பணிகின்றோம்
- ஆனந்தமாய் வணங்கியே ஆத்ம வந்தனம்
- உன் பாத மலர்கள் பணிந்து ஆனந்தமய மடைந்திட
- ஆத்ம ராம சாயியாய் அழகாய் வந்திடுவாய்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்