உன் சங்கல்பம்

  • ஏழ் கடலும், ஏழ் பொழிலும், ஏழ் பிறப்பும், ஏழிசையும்,
  • ஏற்றம் தரும் உன் சங்கல்பம்
  • நான் மறையாய், நல்மழையாய், நானிலத்தில்
  • நலம் பயக்கு முன் நற்கருணை தான்
  • ‘நானிருக்கப் பயமேன்’ எனும் உன்மந்திரச் சத்தியவாக்கு
  • சாயி உன்னன்புக் கருணையின் நித்தியச்
  • சாத்வீகப்பதிகம்தானுன் அருள்பாலிப்புதான்
  • புனித, தெய்வச்சிந்தனையில், விடைதான் நந்தி வாகனமானது
  • வானரம், உன் நாமஸ்மரணையினால்
  • அனுமனாம் தெய்வமானது
  • அசுரகுலப் பிரகலாதனையும் உன் அத்யந்த பக்திதான்
  • உத்தமபக்தனாக்கியது
  • சாய்ராம் நாம, முன்பக்தர்தம், ஆத்ம நாதம்,
  • கீதம், வேதம், பாதம், பிரதாதம்
  • எப்பிறவியிலும் வேண்டுமுன் னருட்கொடையாம்
  • கருணை அன்பே சுவாமி
  • வெள்ளிதனில் சிவசக்தி சொரூபிணியாய் வந்தருளவேண்டும்
  • விடிவெள்ளி தந்து புது விடியலைப் புதுயுகமாக்கிச்
  • சனாதன தர்மத்தில் சாரதியாய்
  • நீ தரவேண்டும் கருணை.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0