நீர் இன்றி அமையாது மனது

  • பரப்பிரம்மம் உன்னை நினைத்தாலே கருணையுடன்
  • வந்திடுவாய்
  • இகபர சுகம் தந்தினியன நல்கிடுவாய்
  • பராபரனுன் பதமலர் தொழுதிடப் பாவவினை களகலும்
  • பஞ்சாட்சரனுன் பர்த்திப் பிரசாந்தி வலம்வர நலங்கள்
  • யாவும் கூடும்
  • தயாபரனுன் தயையின்றித் தரணியிலேது மியங்காது
  • கருணாகரனுன் கருணையின்றிக் காலம் கனிந்து வராது
  • ஏடெடுத்தெழுதும் கவியில், நீதான் மொழியாவாய் சேர்ந்து
  • பரவசமாயுனைத், துதித்துப் பாடும் பாக்களில் நீ ராகமாவாய்
  • பன்மதப்பக்தர்கள், பன்மலர்கள் சாற்றித் துதித்தாலதன்
  • நறுமணமே நீயாவாய் சுகந்தமாய்
  • கடல் அலைகளின் அலையோசையில் சங்கம நதிகளின்
  • சலசலப்பில், பச்சைப் பயிர்களின் பசுமையில்
  • இயற்கையன்னையின், முழுதான எழில்களிலனைத்து
  • மாயிருந்தும், வசந்தமாயழ கூட்டுவாய்
  • மாதா, பிதா, குரு, தெய்வம், ஆன்ற நட்பு, சுற்றமுமாயிருந்து
  • ஆத்ம பலமளித்து, ஆன்ம சுகமளித்தருட் சுகம் தருவாய்
  • நீரின்றியமையாது உலகு
  • சாயி நீர் இன்றி அழகாகாது உயிரே, ஆத்மாவே, சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0