‘பங்காரு’
- மஞ்சளோடு குங்குமமும் மணமிகு நல் மலர்களும்
- திருமங்கல நாணும் தந்து மங்கள வாழ்வளிப்பாளெங்கள்
- சிவசக்தி சாயிமா
- திங்கள் முடி சூடிய சிவனாரின் பாதி பாக உமையாமெங்கள்
- ஸ்ரீ சத்திய சாயி சிவ சக்தி சாயிமா
- திருமதியாய்த் திருமிகு இல்லற வாழ்வளித்துக்
- கருணையளித்திடு வாளவள் திருவாய் மலர்ந்து
- ‘பங்காரு’ எனப்பாங்காய் விளித்தே நல்லாசி கூறிடுவாள்
- திருவருளாய்த் திருவுருவாய்த் தினமே காத்தருள்வாள்
- அவள் திருவீதி உலாவும் திருவதிகைப்பொற்ப பதமு மவள்
- பக்தர்தம் மனம்தானே ! அதுபக்தியின் மணம்தானே !
- அலை, கலை, மலை, மாமகள்களாய் மன மந்திரத்திலருளன்பு
- ஆட்சி செய்வதெங்கள் பர்த்தீஸ்வரி பரமேஸ்வரி பார்வதி
- ஸ்ரீ சத்யசாயி மா சாயீஸ்வரியே
- உனக்குச் சரண கமலப்பாதார வந்தனம் அம்மா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்