சனாதன சாரதியாய்
- பொன்னார் மேனியனே ‘பங்காரு’ என விளிக்கும் சுவாமி
- உன் அபரஞ்சி அன்புக்குக் கருணைக்கு
- யார் தான் அடிமையில்லை ?
- நீ படைத்து காத்து, அழித்து, அருளி, மறைத்தும், ஐந்தொழில்
- புரிந்துயிர்களைக் காக்கும் பொருட்டுக்
- அருணையில் கருணை மழை பொழிகிறாய்
- அருவமுருவமா யுருவமருவமா யருளித்தான் வருகின்றாய்
- ஹரியும் சிவனுமனைத்துத் தெய்வங்களுமொன்றான
- திருவாய் மாதா பிதா குரு தெய்வச் சகாவானவுன்
- விஸ்வரூபத் திருஒளிவெள்ளத்திலொரு துகளாய்
- மிளிர்ந்துன் கருணையொளியி லொளிர்ந்திட
- வரந்தர வர வேண்டும்
- கருணை அன்பு பிரேமை தயை, சகிப்புத்தன்மை, மனிதம்,
- வளர்ந்து சாயி உன் அன்பு மயம் பெருக வேண்டும்
- நீ நினைத்தபோதில், காத்தருளச் சடுதியில் வர வேண்டும்
- சத்யம் சிவம் சுந்தரமாய் சத்யம் தர்மம் சாந்தி
- பிரேமை அகிம்சையில்
- நல்வாழ்வியல் வாழவைக்க வந்தருள வேண்டும்
- உன் கீதைப்பாதை வழிநடத்திட சனாதன சாரதியாய்
- சகலரையும் காத்திடவே நீதான் வர வேண்டும்
- இகபர சுகந்தந்து சம்சார சாகரக்கடல் கடந்து
- முக்தியளித்திடவும் வரவேண்டும்
- சாயி தெய்வமே போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்