மக்கள்சேவையே மகேசன்சேவை..!
Sairam! This is available only in Tamil*

- அழகு திருமகன்
 - அருகிலிருந்து காத்திட
 - அவனிதனில் தோற்றமாம்
 - அவனிதனில் இவரிருக்க இனி
 - பயம்தான் ஏது
 - புவனமதின் மாந்தர்தமக்கு
 
- அன்பின் மழையே நீ
 - அன்பெனும் சாகரம்
 - அன்பு வடிவெடுத்து
 - அன்பினை உலகாருக்கு
 - அள்ளித்தந்தவன் நீ
 
- பெற்றோம் நலமதை
 - முற்றும் காத்திட
 - மானுடனுக்கு போதிக்க வந்த
 - மெய்ப்பொருள் நீ!
 
- நற்பெரும் மானுடப் பிறவி
 - மற்றவர்க்கு உதவுவதே
 - மற்றேதும் சாதனைகள் வேண்டாம்
 - சுற்றியே இருக்கும்
 - இறைதனை அடைந்திட
 - மறைதனின் மணி மொழியிது என
 - குறையிலா குணக்குன்றாய்
 - பறைந்திட்ட பகலவன் நீ
 
- என் வாழ்வே
 - என் உபதேசம் என
 - செப்பிய செம்மலாம்
 - ஒப்பிலா மாமணியே
 
- ஆம்
 
- உண்மையில் உன் வாழ்வே
 - தூய்மை உபதேசமாயிற்று
 - தூயவன் வழிநடந்திட
 - நம் வாழ்வே
 - நம்பியின் உபதேசமாய் ஆகிடும்
 - நலமதை கூட்டி
 - நல்வாழ்வு பெறலாம்
 - எல்லாமும் ஆன
 - வல்லவன் சாயியின்
 - நல் உரைதனை
 - வேதமாய் ஏற்றே
 - அண்டமதில் நிறைந்திட்ட நிமலனிடம்
 - வேண்டுவன பெறுவோம் நாமே
 
- கவிஞர்
 - ஹரிஹரன்
 
  
  Help Desk Number: