மக்கள்சேவையே மகேசன்சேவை..!

Sairam! This is available only in Tamil*

  • அழகு திருமகன்
  • அருகிலிருந்து காத்திட
  • அவனிதனில் தோற்றமாம்
  • அவனிதனில் இவரிருக்க இனி
  • பயம்தான் ஏது
  • புவனமதின் மாந்தர்தமக்கு
  • அன்பின் மழையே நீ
  • அன்பெனும் சாகரம்
  • அன்பு வடிவெடுத்து
  • அன்பினை உலகாருக்கு
  • அள்ளித்தந்தவன் நீ
  • பெற்றோம் நலமதை
  • முற்றும் காத்திட
  • மானுடனுக்கு போதிக்க வந்த
  • மெய்ப்பொருள் நீ!
  • நற்பெரும் மானுடப் பிறவி
  • மற்றவர்க்கு உதவுவதே
  • மற்றேதும் சாதனைகள் வேண்டாம்
  • சுற்றியே இருக்கும்
  • இறைதனை அடைந்திட
  • மறைதனின் மணி மொழியிது என
  • குறையிலா குணக்குன்றாய்
  • பறைந்திட்ட பகலவன் நீ
  • என் வாழ்வே
  • என் உபதேசம் என
  • செப்பிய செம்மலாம்
  • ஒப்பிலா மாமணியே
  • ஆம்
  • உண்மையில் உன் வாழ்வே
  • தூய்மை உபதேசமாயிற்று
  • தூயவன் வழிநடந்திட
  • நம் வாழ்வே
  • நம்பியின் உபதேசமாய் ஆகிடும்
  • நலமதை கூட்டி
  • நல்வாழ்வு பெறலாம்
  • எல்லாமும் ஆன
  • வல்லவன் சாயியின்
  • நல் உரைதனை
  • வேதமாய் ஏற்றே
  • அண்டமதில் நிறைந்திட்ட நிமலனிடம்
  • வேண்டுவன பெறுவோம் நாமே
  • கவிஞர்
  • ஹரிஹரன்
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0