முத்தி வரை
- ஸ்ரீராம நாமம் அனுமனுக்குக் கடலைத் தாண்ட வைத்தது
- சத்ய சாயி ராமா உன் சாய்ராம் நாமம் இவ் வாழ்வியலில்
- வசந்தம் நல்குது
- சீர்மிகு சீரடியிலுன் சேவடி பதித்த வதரித்தாய்
- பாரெல்லாம் மகிழும்வண்ணம் பர்த்திதனில்
- மறுஅவதாரம் செய்வித்தாய்
- கார்கால மேகங்களாய்க் கருணைதனை
- மழையாய்ப் பொழிந்திட்டாய்
- ஊர்தோறுமுன்னதச் சேவைகளாற்றிடப் பணித்திட்டாய்
- தேர்பவனி கண்டு பக்தர் மனம் மகிழப் பூச்சொரிந்து
- தொழவைத்தாய்
- பர்த்திதனைப் பார்போற்றும் பக்தித்தலமாக்கி விட்டாய்
- அவரவர் தெய்வமா யனைவர்க்குமருட்காட்சி தந்து விட்டாய்
- கலியுக அவதாரம் செய்து அன்பையே விதைத்து விட்டாய்
- அன்பு மதம் மொழி இனமென்று அன்பிலருளாட்சி
- செய்கின்றாய் சுவாமி
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையில், சனாதன ஆன்மீகப்
- பக்தியை வளர்க்கிறாய், முத்தி வரை முன்னிற்கிறாய்
- உன் சத்தியப் பாதையில் சாயி நிறுவனங்களைப் பதிக்கிறாய்
- சாத்வீக சனாதன கீதைப் பாதையில் வழி நடத்திச் செல்கிறாய்
- தெய்வீக அருளமுத உரைகளில் அரசாட்சி செய்கிறாய்
- உன் சங்கமத் திருவடிக்குக் கோடி கோடி
- ஆனந்த வந்தனம் சுவாமி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்