முத்தி வரை

  • ஸ்ரீராம நாமம் அனுமனுக்குக் கடலைத் தாண்ட வைத்தது
  • சத்ய சாயி ராமா உன் சாய்ராம் நாமம் இவ் வாழ்வியலில்
  • வசந்தம் நல்குது
  • சீர்மிகு சீரடியிலுன் சேவடி பதித்த வதரித்தாய்
  • பாரெல்லாம் மகிழும்வண்ணம் பர்த்திதனில்
  • மறுஅவதாரம் செய்வித்தாய்
  • கார்கால மேகங்களாய்க் கருணைதனை
  • மழையாய்ப் பொழிந்திட்டாய்
  • ஊர்தோறுமுன்னதச் சேவைகளாற்றிடப் பணித்திட்டாய்
  • தேர்பவனி கண்டு பக்தர் மனம் மகிழப் பூச்சொரிந்து
  • தொழவைத்தாய்
  • பர்த்திதனைப் பார்போற்றும் பக்தித்தலமாக்கி விட்டாய்
  • அவரவர் தெய்வமா யனைவர்க்குமருட்காட்சி தந்து விட்டாய்
  • கலியுக அவதாரம் செய்து அன்பையே விதைத்து விட்டாய்
  • அன்பு மதம் மொழி இனமென்று அன்பிலருளாட்சி
  • செய்கின்றாய் சுவாமி
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையில், சனாதன ஆன்மீகப்
  • பக்தியை வளர்க்கிறாய், முத்தி வரை முன்னிற்கிறாய்
  • உன் சத்தியப் பாதையில் சாயி நிறுவனங்களைப் பதிக்கிறாய்
  • சாத்வீக சனாதன கீதைப் பாதையில் வழி நடத்திச் செல்கிறாய்
  • தெய்வீக அருளமுத உரைகளில் அரசாட்சி செய்கிறாய்
  • உன் சங்கமத் திருவடிக்குக் கோடி கோடி
  • ஆனந்த வந்தனம் சுவாமி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0