வரவேண்டும்
- மதுகைடபர், சண்ட முண்டன், சும்பன் நிசும்பன்,
- சம்ஹாரவதனி, சண்டிகை தேவி சாயிமா
- மாதா, பிதா, குரு, தெய்வச் சகாவாய், வழிநடத்திடும் தாயே
- மகமாயி செண்பகாதேவி சாயிமா
- அத்தியந்த ஆத்மார்த்த அன்புப் பக்தர்களின் அதிசயத்
- தெய்வத்தின் தெய்வமே, தெய்வநாயகி சாயிமா
- நித்தியம், நிர்மலமாய்ச், சாந்நித்திய மளித்திடும் சாத்வீக
- சங்கல்பச் சாயினி பர்த்தீஸ்வரி சாயிமா
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை, வழிநடத்தும்
- முத்தேவியரின் அம்சமே ஹம்சவேணி
- சாரதாதேவி சாயிமா
- முப்போது மெப்போதும், தப்பாது உன் சங்கமத் திருவடிகளில்
- சங்கமித்தே சாஷ்டாங்கச் சரணாகதி யளித்திடும்
- சாமுத்திரிகா தேவி சாயிமா வரவேண்டும்
- அருள் தரவேண்டும் அமிர்தவர்ஷினி தேவி சாயிமா.
- உன் பொற்றாமரைப் பாதகமலங்கள் பணிகிறோம்
- ஸ்ரீ சத்ய, சாயீஸ்வரி, பர்த்தீஸ்வரி சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்