சரணமே சந்ததம்

  • உருவாய், அருவாய்க் கருவாய், வந்தே நல்வாழ்வு தந்திடுவாய்
  • திருவாய், கற்பகத்தரு வாயென்றும்
  • அபயஹஸ்த மளித்திடுவாய்
  • மானஸத் துணையாயுடன் வந்து என்றும்
  • மகிமை களாற்றிடுவாய்
  • மானுஷ்ய ரூபத்திலவதரித்து வந்த எங்கள் ஸ்ரீ சத்திய சாயீசா
  • வினைகளைத் தீர்த்து நற்பவியளிப்பதில் ஸ்ரீசாயி கணேசன்
  • வந்த வரும் பிணி போக்கி உடல் நலம் காப்பதில்
  • ‘ஸ்ரீ சாயிமுருகன்’
  • விரைந்தோடி வந்து விருந்தோம்பலளித்தலில் ஸ்ரீசாயி சிவன்
  • மந்தகாசப் புன்னகையில் கனவு நனவில் காட்சியளித்திடும்
  • ஸ்ரீ சாயி கிருஷ்ணன்
  • சத்திய தர்மவாழ்வு வாழ்ந்து காட்டிய ஸ்ரீ சாயிராமன்
  • கணக்கற்ற எண்ணிலடங்கா அன்னையர் அன்பில்
  • ஸ்ரீ சாயி துர்க்காபரமேஸ்வரி, சாயீஸ்வரி, பர்த்தீஸ்வரி
  • சீரடி அவதாரத்தின் சீர்மிகு உதியின் உத்தமம்
  • சீரடி பாபா திருஅனுபூதியாய்
  • சகல நலம் நல்கும் அருமருந்துன் பரமபவித்ர விபூதியாய்
  • ஸ்ரீ சத்ய சாயி
  • சஞ்சீவி மூலிகைகள் ஔஷதங்களால் காப்பதில்
  • ஸ்ரீசாயி ஆஞ்சநேயர்,
  • சிரஞ்சீவியாய் வாழ்வியல் வாழ அருளும் பரஞ்சோதி
  • சர்வமத தெய்வமாய்க் காட்சிதரும் பரப்பிரும்மம் நீயே
  • போற்றியே வந்தனம், உன் சரணமே சந்ததம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0