தவக்கோலம்
- தவக்கோலம் தரும் எங்கள்சாயி காமாட்சி
- சிவசக்தி ஸ்வரூபிணி சாயி விசாலாட்சி
- அகத்தவத்தில் வாழுகின்ற அன்னையே சாயி மீனாட்சி
- செகம்முழுதும் அருள்கின்ற தாயே சாயி பர்த்தீஸ்வரி
- யுகம்தோறும் தொடர்கின்ற சாயி பரமேஸ்வரி
- மகா மகமாய் மகிமைதரு சாயி விஸ்வேஸ்வரி
- சங்கரி, சாம்பவி, சரஸ்வதி, சாரதை, நாற்கர நாயகி
- நான்மறை வேதம் நீ நற்பவளமுத்து நீ நற்றுணை நாயகி நீ
- கற்பகத் தருவே பொற்பதத்திரு உன் பங்கய மலரடி பாங்காய்த்
- தொழுதிட நற்கதி நல்வரம் நற்பவிதானளித் திடுவாயே
- ஸ்ரீசத்ய சாயீஸ்வரிஅன்னையே
- வெள்ளியில், வேள்வியாய், வந்து கருணை மழைபொழிவாயே
- சொற்பதத்தில் சொக்க வைக்கும்
- அருளமுத உரைகள் அளித்துன்
- பொற்பதப் பங்கய மலரில் வணங்கிட வரமருள்வாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்