வழிக்குத் துணை

  • வழிக்குத் துணையுனது பஜன், நாமஸ்மரணையும்
  • கீர்த்தனமும் விழிக்குத் துணையுன்
  • திவ்ய தரிசனமும் கரிசனமும்
  • பழிவராமற் காத்திடுமுன் சங்கல்பமும் சாந்நித்தியமும்
  • வாழ்வியலில் இருவினை தடுத்தே வாழவைத்
  • திடுமுன் அன்பும் கருணையும்
  • பிழை பொறுத்துப் பிழைக்க வைத்திடுமுன்
  • காருண்யமும் தரிசனமும்
  • மழையாய்ப் பொழிந்துன்னருள் பயிர்களையும்
  • உயிர்களையும் பசுமையாய்த் தழைக்க வைத்திடும்
  • இறங்கி இரங்கியே இனிதாய் வந்தின்னல் நீக்கித்
  • தந்தும் காத்தருளும் பன்மதப் பக்த அன்பர்களின்
  • மேலுன் ஈகையும் தயையும்
  • மழையாய்ப் பொழிந்திடுமுன் னருட்கொடையு மருளும்
  • உன் அன்பருளுரையும் சனாதனமும்
  • உனதன்பு மதத்திலடைக்கலமானதும் பிறவிப்பயனே
  • எங்கெங்கோ தோன்றிய உன் பக்த நதிகள் பவசாகரக்கடலாம்
  • உன் சங்கமத் திருவடியில் கூடிச்சங்கமித்து அங்கம் வகிக்கும்
  • உன் சேவைப் பணிகளாற்றுதல் முக்திக்கு முகமன் கூறி
  • முழுமனதின் சிம்மாசனத்திலுனைத்
  • தானமர் வித்தானந்தம் கொள்ளும்
  • வரவேண்டு மருள் தரவேண்டும்
  • ஸ்ரீ சத்ய சாயீசா உனக்கு
  • ஆத்ம நித்ய சத்ய வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0