விபூதி எங்களின் அநுபூதி

  • புதுப்புது அர்த்தங்கள் தரும்உன் அற்புதம்
  • புத்தம் புதுப் பூவாய் மலர்கின்ற ஆனந்தம்
  • அற்புத அதிசய ஔஷதம் உன் விபூதி
  • உன் பொற்பதம் தானென்றும் எங்களுக்கு அனுபூதி
  • என் கடன் உன் சேவைப் பணிகளாற்றுதல்
  • என்றெண்ணிச் செயல்பட்டால்
  • வருபிணி, துயர்போக்கி வாழ்வியலில் நற்பணி தந்து
  • வசந்தம் தருவாய், நற்பவியளிப்பாய்
  • திருமுறை திருமந்திரம் திருப்பதிகம் பாசுரங்களா யவனியில்
  • பஜனைப்பண்களும் ஓம்காரம் நாமஸ்மரணை
  • நாமாவளிகளும் நகர சங்கீர்த்தனங்களும்
  • ஜெபதவங்களும் பற்பலசேவைகளும்
  • வலம்வந்து நலம் நல்குகின்றன
  • மந்திரமாகும் திருநீறு, ‘சாய்ராம்’ எனும்
  • மந்திரச்சொல்லே மகிமைபுரிந்திடும் அரு மருந்தாகும்
  • குருவாய் வருவாய் திருவாய்த் தெரிவாய்
  • அருவுருவாய் அருளி அதிசயிக்கச் செய்வாய்
  • சுவாமி உன் கருணைக்கு எல்லை ஏது
  • உன் அன்புக் கரிசனத்திற்கு விலை ஏது
  • உன் ஸ்பரிசனம் தரிசனம் சம்பாஷனத்திற்கு
  • ஈடு இணை தானேது ?
  • பிரசாந்தியும் நீயுமே உலகம், பிறசாந்திவேண்டாம்
  • உன் பிரகாந்தி போதும்,
  • உன்னருட் காந்திதான் வேண்டும்
  • பிரசாந்திக் கருவறைத் தெய்வமே
  • உன் பாதார விந்தங்கள் சரணம் சரணம் சுவாமி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0