விபூதி எங்களின் அநுபூதி
- புதுப்புது அர்த்தங்கள் தரும்உன் அற்புதம்
- புத்தம் புதுப் பூவாய் மலர்கின்ற ஆனந்தம்
- அற்புத அதிசய ஔஷதம் உன் விபூதி
- உன் பொற்பதம் தானென்றும் எங்களுக்கு அனுபூதி
- என் கடன் உன் சேவைப் பணிகளாற்றுதல்
- என்றெண்ணிச் செயல்பட்டால்
- வருபிணி, துயர்போக்கி வாழ்வியலில் நற்பணி தந்து
- வசந்தம் தருவாய், நற்பவியளிப்பாய்
- திருமுறை திருமந்திரம் திருப்பதிகம் பாசுரங்களா யவனியில்
- பஜனைப்பண்களும் ஓம்காரம் நாமஸ்மரணை
- நாமாவளிகளும் நகர சங்கீர்த்தனங்களும்
- ஜெபதவங்களும் பற்பலசேவைகளும்
- வலம்வந்து நலம் நல்குகின்றன
- மந்திரமாகும் திருநீறு, ‘சாய்ராம்’ எனும்
- மந்திரச்சொல்லே மகிமைபுரிந்திடும் அரு மருந்தாகும்
- குருவாய் வருவாய் திருவாய்த் தெரிவாய்
- அருவுருவாய் அருளி அதிசயிக்கச் செய்வாய்
- சுவாமி உன் கருணைக்கு எல்லை ஏது
- உன் அன்புக் கரிசனத்திற்கு விலை ஏது
- உன் ஸ்பரிசனம் தரிசனம் சம்பாஷனத்திற்கு
- ஈடு இணை தானேது ?
- பிரசாந்தியும் நீயுமே உலகம், பிறசாந்திவேண்டாம்
- உன் பிரகாந்தி போதும்,
- உன்னருட் காந்திதான் வேண்டும்
- பிரசாந்திக் கருவறைத் தெய்வமே
- உன் பாதார விந்தங்கள் சரணம் சரணம் சுவாமி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்