வில்வமாலை சூடி

  • வரி சங்கமொலித்திடத், தென் பொதிகைத், தென்றலசைந்திட
  • வடிவழகாய் நீ நடந்து வருகையிலுன் தரிசனம் காண
  • வரிசையில மர்ந்துன் நாமஸ்மரணையில்
  • திளைக்க வேண்டும்
  • கயிலாய இசை முழக்கத்தில் முப்புரமெரித்த உமை பாதிப்
  • பங்கனாயுனை நந்தியம் பெருமாளுடன் சிவ கணங்கள்
  • புடைசூழக், கண்ணாரக் கண்டு மெய்மறந்திடவேண்டும்
  • முக்கண்ணன் உன்முதல்வன் ஐங்கரனுடன் – இள
  • முருகுவேலனுடன் சிவசக்திரூபித்தாய்
  • பார்வதி தேவியுடன் உன்னை வலம் வந்து நலம்
  • வாழத் துதிக்கவேண்டும்
  • கதம்ப மலர் தூவி மந்தாரை நாகலிங்கப்பூச் சாற்றி
  • வில்வ மாலை சூடித் தும்பைப்பூக்களால் சரக்கொன்றையில்
  • அர்ச்சித்துன் லிங்கத்திருமேனி தொழவேண்டும்
  • சாயி உனைச் சிவமாய்த், தவமாய், அகமாய், செகமாய்ச்,
  • செபமா, யெண்ணிப் பர்த்திதனிலுன் பிரசாந்திச்
  • சிவபூசை காண வேண்டும்
  • எங்கும் எதிலும் சாயிமயமாய்க் காணுமிடமெல்லாமுன்
  • காட்சியாயதில் சாட்சியாய் நீயிருந்தே
  • மாட்சிசெய்திடவேண்டும், மீண்டும்
  • பிறவா மீட்சியளித்திட வேண்டும்
  • ஸ்ரீ சாயி சிவசாயீஸ்வர, பர்த்தீஸ்வரா போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0