வில்வமாலை சூடி
- வரி சங்கமொலித்திடத், தென் பொதிகைத், தென்றலசைந்திட
- வடிவழகாய் நீ நடந்து வருகையிலுன் தரிசனம் காண
- வரிசையில மர்ந்துன் நாமஸ்மரணையில்
- திளைக்க வேண்டும்
- கயிலாய இசை முழக்கத்தில் முப்புரமெரித்த உமை பாதிப்
- பங்கனாயுனை நந்தியம் பெருமாளுடன் சிவ கணங்கள்
- புடைசூழக், கண்ணாரக் கண்டு மெய்மறந்திடவேண்டும்
- முக்கண்ணன் உன்முதல்வன் ஐங்கரனுடன் – இள
- முருகுவேலனுடன் சிவசக்திரூபித்தாய்
- பார்வதி தேவியுடன் உன்னை வலம் வந்து நலம்
- வாழத் துதிக்கவேண்டும்
- கதம்ப மலர் தூவி மந்தாரை நாகலிங்கப்பூச் சாற்றி
- வில்வ மாலை சூடித் தும்பைப்பூக்களால் சரக்கொன்றையில்
- அர்ச்சித்துன் லிங்கத்திருமேனி தொழவேண்டும்
- சாயி உனைச் சிவமாய்த், தவமாய், அகமாய், செகமாய்ச்,
- செபமா, யெண்ணிப் பர்த்திதனிலுன் பிரசாந்திச்
- சிவபூசை காண வேண்டும்
- எங்கும் எதிலும் சாயிமயமாய்க் காணுமிடமெல்லாமுன்
- காட்சியாயதில் சாட்சியாய் நீயிருந்தே
- மாட்சிசெய்திடவேண்டும், மீண்டும்
- பிறவா மீட்சியளித்திட வேண்டும்
- ஸ்ரீ சாயி சிவசாயீஸ்வர, பர்த்தீஸ்வரா போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்