சாயி காயத்திரி தேவியே

  • சாயி காயத்திரி தேவியே, கருணை பொழிந்திடக்
  • காசினியில் வந்துதித்தாய்
  • அவனியில் அனைவர்க்கும் அருளைப் பொழிந்திட
  • அன்பே உருவாயவதரித்தாய்
  • புவனம் முழுதும் புதுவசந்தம் பெறப் புதுவிடியலாயுன் அன்பு
  • அருளாசிதனைப் பகிர்ந்தளித்தாய்
  • சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையை இப்
  • பார்முழுதும் பரிசளித்தாய்
  • அவதியுற்றோர்க்கு அடைக்கலம் தந்தி டுவாய்
  • திருநிறை தாயே, உன் திருவடி பணிந்தோம்
  • மந்திரப் பொருளாக, மாதவப் பயனாக, மாதவன் சோதரியாய்
  • இத்தரணியிலே பிரவேசித்துப் பக்திப் பிரவாகம்
  • பரவச் செய்தாய், பரவசம் தந்தாய்
  • வந்தனை செய்தவர்க்கு வரம் தந்தே வாழ்வளித்தாய்
  • தீவினை வேதனை போக்கி வெந்துயர் தீர்த்து
  • மேதினி உள்ளளவுமே காத்து நிற்பாய், கவசமாவாய்
  • கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தந்து எண்ணும்
  • போதெல்லாம் எதிரில் வந்து ஏற்றமே அளித்திடுவாய்
  • கண்ணின் மணியாய் எங்களைக் காத்து இம்மண்ணுலகில்
  • உயிர்கள் மகிழவே பேரருள் புரிகின்றாய்
  • ஸ்ரீ சத்யசாயீஸ்வரி, பர்த்தீஸ்வரி, சிவசக்தி சாயிமா போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0