வியாழ குருவாய்

  • வியாழ குருவாய் வந்தாலும் வியாபித்து
  • நீ வரவேண்டும் சாயி குருதேவா
  • வியாகூலம் நீக்கி அனுகூலமாக்கிடவும்
  • நீதான் வரவேண்டும் சாயி குருதேவா
  • வியாழக்கிழமை உந்தன் தினம், உனக்குப் பிடித்த தினம்
  • வியாழ குருவாயும் நீயே வரவேண்டும் சாயி குருதேவா
  • இரு வினைகள் நீக்கிப் பிறவிக்கடல் கடந்திட விடுதலை தந்திட
  • முத்தி வரை நீ மட்டும் வரவேண்டும் சாயி குருதேவா
  • சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையில் வாழ்வியல்
  • வாழ்ந்திட வரமளித்தருள நீதானே, தானே,
  • வந்தருள வேண்டும் சாயி குருதேவா
  • சத்சங்கங்களிலுன் சாயி இலக்கியங்களறியச்
  • சங்கல்பம் தர வேண்டும்
  • நித்தியப் பூசனைகலிலுந்தன் நாமாவளிகளில்
  • மெய் மறந்துலயிக்க வேண்டும்
  • சாஸ்வதமாயுன் சாந்நித்யம் சகல
  • உயிர்களிலும் உய்விக்க வேண்டும்
  • சத்தியசாயி தெய்வம் என் தெய்வமெனும்
  • சத்திய எண்ணத்தில் சங்கமமாக வேண்டும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0